சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்... விரைவில் சந்தை வரும் 'டிசைனர் அரிசி'!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CSIR-NIIST நிறுவனம், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தச் சிறப்பு 'டிசைனர் அரிசி'யை உருவாக்கியுள்ளது.
சாதாரண அரிசியில் புரதச்சத்து குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த டிசைனர் அரிசியில் சாதாரண அரிசியை விட 3 மடங்கு அதிக புரதச்சத்து உள்ளது. இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) அளவு மிகவும் குறைவு. பொதுவாக GI அதிகம் உள்ள உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக்கும். ஆனால் இந்த அரிசி சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவும்.

இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 (Vitamin B12) உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்டுள்ளன. இது ரத்த சோகை போன்ற பிரச்சனைகளைப் போக்க உதவும். இந்த டிசைனர் அரிசியைப் பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், இதற்கான தொழில்நுட்பத்தை முன்னனி நிறுவனங்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
டாட்டா கன்சியூமர் புரோடக்ட்ஸ் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த எஸ்.எஸ். சோல் புட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இதற்கான தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 18ல் டெல்லியில் கையெழுத்தானது. இதன் மூலம் இந்த அரிசி விரைவில் பெரிய அளவிலான உற்பத்தியில் இறக்கப்பட்டு, சாதாரண கடைகளில் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த அரிசியைத் தயாரிப்பதற்குக் மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பம் (GMO) பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அரிசி மாவு மற்றும் இதர சத்துக்களைக் கொண்டு நவீன முறையில் இந்தத் தானியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சுவை மற்றும் மணத்தில் சாதாரண அரிசியைப் போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
