தொடரும் பயங்கரம்... தெருநாய் கடித்து குதறியதில் சிறுவன் பலி!

 
நாய்

 ஆந்திர மாநிலம் குண்டூர் ஸ்வர்ண பாரதி நகரில் வசித்து வருபவர்   நாகராஜு. இவரது மனைவி ராணி. இதில் நேற்று முன்தினம் நாகராஜு பணிக்கு சென்ற நிலையில், ராணி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

நாய்

இவர்களது 4 வயது மகன் ஐசக், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தெரு நாய் ஐசக் மீது பாய்ந்து கடித்து குதறி, கழுத்தை கவ்வி, இழுத்துச் சென்றுவிட்டது.

கேரள நாய்

அக்கம் பக்கத்தினர் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து  நாயை விரட்டியடித்து சிறுவனை ரத்த வெள்ளத்தில் மீட்டனர். உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சிறுவன் ஐசக் நேற்று பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?