40 மணி நேரம் போராடியும் பலனில்லையே!! 60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி!! கதறி துடித்த பெற்றோர்!!

 
சிறுவன்

தண்ணீருக்காக ஆழ்துளை கிணறுகளை தோண்டுபவர்கள், போர்வெல் போடுபவர்கள்  தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் விடுவதால் அதில் குழந்தைகள் தவறி விழுந்து விடுகின்றனர். பல அசம்பாவிதங்கள் நாடு முழுவதும் ஏற்பட்டாலும் இன்னும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.  மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில்  நேற்று மார்ச் 14ம் தேதி  செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயது சிறுவன் தவறி விழுந்து விட்டான்.

சிறுவன்

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவும்,மாநில பேரிடர் மீட்பு குழுவும், தீயணைப்பு துறையும் சிறுவனை மீட்க போராடி வருகிறது. அதன்படி சிறுவன் 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி உதவிக் காவல் கண்காணிப்பாளர் விடுத்த செய்திக்குறிப்பில்  தொடர்ந்து சிறுவனுக்காக  ஆழ்துளைக் கிணற்றில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகிறது,

சிறுவன்

இருப்பினும், சிறுவனிடம் இன்னும் பேச முடியவில்லை. சிறுவனைக் கண்டுபிடிக்க வெப் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. உணவும் வழங்கப்படவில்லை. நேற்று காலை நடைபெற்ற நிலையில் 24 மணி நேரம் ஆகியிருப்பதால் மீட்பு பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் இதே போல் மத்தியப் பிரதேசத்தின் அகமதுநகர் மாவட்டத்தில்  நடைபெற்ற ஒரு சம்பவத்தில்  5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானான். இந்த சிறுவன் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 20 அடியில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web