கோர விபத்து... நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி... 22 பேர் படுகாயம்!

 
பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில்  மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு  பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், அட்டோக் மாவட்டத்தில்  நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென  பேருந்து சாலையோரம் கவிழ்ந்து கோரவிபத்து ஏற்பட்டது.  

உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

பாகிஸ்தான்
மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாடு முழுவதும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web