500 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 14 பேர் பலி... பெரும் சோகம்!
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் இருந்து குப்வி நோக்கி ராஜ்கார் வழியாக நேற்று ஒரு தனியார் பஸ் சென்றது. சிர்மோர் மாவட்டம் ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையை விட்டு விலகி 500 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்தது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த பகுதி மலைப்பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
