நடுரோட்டில் தள்ளாடி விழுந்த நபர் மீது ஏறி இறங்கிய பேருந்து... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
வீடியோ
 

 

பெங்களூரின் ஹெக்கனஹள்ளி மெயின் ரோட்டில் ஒரு கோர விபத்து சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 13-ம் தேதி இரவு 7 மணியளவில், 42 வயதான சேத்தன் குமார் மது அருந்தி போதையில் சாலையோரத்தில் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென சாலையில் விழுந்து, பின்னால் வந்த தனியார் பேருந்தின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.

இதில் சேத்தன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நேரத்தில் பேருந்து டிரைவர் நரேந்திரா அங்கு நிறுத்தாமல் தப்பி ஓடினார். காமாக்ஷிபால்யா போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

சிசிடிவி கேமராக்கள் மூலம் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் அடையாளம் கண்டறியப்பட்டது. தலைமறைவாக இருந்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார், “விபத்து எதிர்பாராமல் நடந்திருந்தாலும், தகவல் தெரிவிக்காமல் தப்பியோடியது குற்றம்” என தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!