பரபரப்பு... சிக்னலில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

சென்னை நீலாங்கரையில் வசித்து வருபவர் 34 வயது பிரபு. இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் நேற்று இரவு 7மணிக்கு தோமையார்மலை சர்ச்சுக்கு சென்று கொண்டிருந்தார். 28 வயது பிராங்க்ளின் காரை ஓட்டி சென்றார்.
துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக சென்றபோது, பள்ளிக்கரணை மேம்பாலம் சிக்னல் அருகே சிக்னலுக்காக காத்திருந்தனர்.
அப்போது, திடீரென காரின் முன்பகுதியில் புகை வந்து தீப்பற்றி எரிந்தது.
உடனே, காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி உயிர் தப்பினர். அப்போது அங்கிருந்த பள்ளிகரணை போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பள்ளிக்கரணை காவல்நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பள்ளிக்கரணையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!