சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றொரு காரில் மோதி பயங்கர விபத்து... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், அங்கு நடந்து சென்ற இளம்பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Her guardian angels were just in time. pic.twitter.com/Qdp2ZNMFLC
— The Best (@Thebestfigen) January 15, 2026
அந்த வீடியோவில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே இளம்பெண் நடந்து செல்வதும், அச்சமயம் எதிர்பாராத விதமாக வந்த கார் பயங்கரமாக மோதுவதும் பதிவாகியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த கார் தலைகீழாக கவிழ்ந்தாலும், இளம்பெண்ணை தொடாமல் மறுபக்கம் தூக்கி வீசப்பட்டது.
விபத்து நடந்த நொடியில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனே அங்கிருந்து ஓடிச் சென்று தன்னை காப்பாற்றிக் கொண்டார். ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பிய இந்த காட்சி காண்போரை உறைய வைத்துள்ளது. கடவுளின் அருளால் அவர் பிழைத்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
