8 பேருந்துகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி, 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
கார் விபத்து
 

உத்தரப் பிரதேசத்தில் தில்லி–ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. அடர்ந்த மூடுபனி காரணமாக பார்வை குறைந்தது. இதனால் விரைவுச் சாலையில் சென்ற 8 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதின. ஒரு பேருந்தில் தீப்பிடித்தது. அதனைத் தொடர்ந்து மற்ற பேருந்துகளுக்கும் தீ பரவியது.

ஆம்புலன்ஸ்

என்ன நடக்கிறது என புரியாமல் வாகன ஓட்டிகளும் பயணிகளும் தவித்தனர். தீ விபத்தில் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ், காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கின. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

மதுரா மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மருத்துவமனைகளுக்கு பலர் கொண்டு செல்லப்பட்டனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்த பகுதியில் வாகனங்களை அகற்றும் பணி நடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!