3 வயது குழந்தை மீது காரை ஏற்றி கொலை.. ஓட்டுனர் வெறிச்செயல்...!

 
அர்பினா

பெங்களூரு, பெல்லந்தூர் கசுவினஹள்ளியில் உள்ள சம்ரித்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்   ஜோக் ஜூடர் -  அனிதா தம்பதி. இவர்களது   3 வயது குழந்தை அர்பினா  . இந்த குழந்தை டிசம்பர் 10ம் தேதி   வீட்டுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தது.   அப்போது குழந்தை அலறும் சத்தம் கேட்டது. உடனே ஓடி வந்து பார்த்ததில்   உடல் முழுக்க படுகாயங்களுடன் குழந்தை கதறி அழுதது.

அர்பினா

ரத்த வெள்ளத்தில் கிடந்த  குழந்தையை   உடனே தூக்கிக் கொண்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அர்பினா பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம்  குறித்து   காவல்  நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின.  
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததாக பெற்றோர்  புகார் அளித்திருந்தனர்.  

போலீஸ்

குழந்தையின் உடலில் ரத்தக்கசிவு இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில்  அருகில் இருந்த   சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில்   நடந்த பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்தது. குழந்தை அர்பினா கார் மீது மோதியது  கண்காணிப்பு கேமராவில் பதிவானது கண்டறியப்பட்டது.  காரை ஓட்டி வந்த சுமன்    குழந்தை மீது ஏறி நசுக்கி விட்டு சென்றது சிசிடிவியில்  பதிவாகி இருந்தது. இதனால்   குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  இதையடுத்து டிரைவரின் அலட்சியத்தால் விபத்து நடந்தது தெரிந்ததால் டிரைவர் சுமன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web