கொடூரம்... காதலனுடன் சென்ற மகளை கெஞ்சி வீட்டிற்கு அழைத்து வந்த ஆணவ கொலை!

 
உறைய வைக்கும் சம்பவம்.. .காதலனுடன் சென்ற மகளை கெஞ்சி வீட்டுக்கு அழைத்து ஆணவப் படுகொலை செய்து பாத்ரூமில் அடைத்த தந்தை! 

காதலனுடன் சென்ற மகளை, கெஞ்சி வீட்டிற்கு அழைத்து வந்து, தந்தையே ஆணவக் கொலைச் செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் சிங். முன்னாள் ராணுவ வீரரான இவரது மகன், தனது 25 வயதுடைய மகளை ஆணவக் கொலைச் செய்து விட்டி, வீட்டின் பாத்ரூமில் சடலத்தைப் பூட்டி மறைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. முகேஷ் சிங்கின் மகள் தன்னுடன் கல்லூரியில் படித்த வேற்று சமூகத்து வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி முகேஷ் சிங்கின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் டெல்லிக்கு சென்று விட்டார். உடனே முகேஷ் தனது மகளை, பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும், காதலுக்கு சம்மதிப்பதாகவும், வீட்டிற்கு வருமாறும் கெஞ்சி அழைத்துள்ளார். இதனால் முகேஷ் சிங்கின் மகள் தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது முகேஷ் சிங் தனது மகளை கொலைச் செய்து வீட்டு பாத்ரூமில் வைத்து பூட்டி விட்டார். வீட்டிற்கு வந்த மகள் எங்கே என மனைவி கேட்டபோது மீண்டும் வீட்டை விட்டு ஓடி விட்டதாக முகேஷ் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து முகேஷ் சிங்கின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web