உறைய வைக்கும் அதிர்ச்சி!! நண்பனை கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த கொடூரம்!! காதலியிடம் பேசியதால் ஆத்திரம்!!

 
நவீன் கிருஷ்ணா

பார்க்காமலே காதல், பேசாமலே காதல், எங்கிருந்தாலும் வாழ்க, லவ் டு டே காதல் எல்லாம் மலையேறி விட்டது. ஒத்து வரவில்லை எனில் ரயிலில் தள்ளி கொலை, காதலியை கொன்று நாய்களுக்கு வீசுதல், ஆசிட் ஊற்றுதல், கொலை செய்து எரித்தல் என கொடூரமாகி வருகிறது. இளைய சமுதாயத்தின் இந்த போக்கு விபரீதமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதே போல் ஒரு கொடூர சம்பவம் தெலங்கானாவில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் படித்து வருபவர் 22 வயது  மாணவர் நவீன். அவருடன் அதே வகுப்பில் படித்து வந்த சக மாணவன் ஹரி ஹர கிருஷ்ணா.

போலீஸ்

இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை  காதலித்து வந்துள்ளனர். முதலில் நவீன் தனது காதலை அந்த மாணவியிடம் கூறியதில் அந்த மாணவியும் நவீனின் காதலை ஏற்றுக்கொண்டு விட்டார். அதுவரை பிரியாத நண்பர்களாக இருந்த இருவரும் பெண்ணுடன் ஏற்பட்ட காதலால் நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.  சில நாட்களுக்கு பிறகு  ஹரிஹர கிருஷ்ணா அந்த மாணவியுடம் தனது காதலை வெளிப்படுத்தினார். நவீனை பிரிந்து விட்டதால் அந்த மாணவி கிருஷ்ணாவுக்கு  சம்மதம் தெரிவித்துள்ளார்.


அதே நேரத்தில் பழைய காதலனான நவீனும் அந்த பெண்ணுக்கு அவ்வப்போது வாட்ஸ் அப் மூலம் பேசி தொல்லை கொடுத்து கொண்டே இருந்தார்.இதனையடுத்து  அந்த மாணவி தனது காதலனான ஹரிஹர கிருஷ்ணனிடம் இந்த பிரச்சனையை தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த ஹரிஹர கிருஷ்ணன் தனது காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த தனது நண்பன் நவீனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக கடந்த 3 மாதங்கள் திட்டமிட்டு வந்தார். பிப்ரவரி 17ம் தேதி  இரவு  நவீனை தில்ஷுக்நகரில் உள்ள தனது வீட்டிற்கு ஹரிஹர கிருஷ்ணன் அழைத்து சென்றார் . செல்லும் வழியில் பேடா அமெர்பெட் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு நவீனை அழைத்து சென்றார். அங்கு நவீனும் ஹரிஹர கிருஷ்ணனும் ஒன்றாக மது அருந்தினர். போதையில் காதலி விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முற்றிய நிலையில் ஹரிஹர கிருஷ்ணன் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு நவீனை கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டார்.

மொபைல்

அதன் பிறகு அச்சத்தில் உறைந்த கிருஷ்ணன்  நவீனின் தலையை துண்டித்து, உடலை இரண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்தார். இருந்தாலும் ஆத்திரம் அடங்கவில்லை.  உடனே  நவீனின் பிறப்புறுப்பையும் துண்டித்து விட்டார். நவீனை கொடூரமாக கொலை செய்து அதனை புகைப்படம் எடுத்து  தனது காதலிக்கு அனுப்பி இனி உனக்கு தொல்லை இல்லை என தெரிவித்துள்ளார். அத்துடன் தலைமறைவான அவர் நேற்று போலீசில் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் ஹரிஹர கிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.  நவீனின் உடலை மீட்ட போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலிக்கு போன் செய்து தொல்லை கொடுத்ததால் நண்பனை கொடூரமாக கொலை செய்த இச்சம்பவம் தெலங்கானா மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web