கோயிலாறு அணை வாசலில் சுருண்ட ராஜநாகம்… அச்சத்தில் பொதுமக்கள் !

 
ராஜநாகம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோயிலாறு அணை பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. 42 அடி உயரமுள்ள இந்த அணை வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 21 அடியாக உள்ள நிலையில், பொதுமக்கள் அணைப்பகுதிக்குச் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோயிலாறு அணை நுழைவுவாயில் அருகே தடுப்புச்சுவர் ஓரத்தில் மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று சுருண்டு கிடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் அணைப்பகுதியில் ராஜநாகம் திரியும் காட்சி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கோயிலாறு அணைப்பகுதியில் பணியாற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணிக்கு சென்று வர வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. அணைப்பகுதியில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!