கல்லூரி மாணவன் துடிதுடித்து பலி!மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சோகம்!

 
மின்வேலி

கிராமத்தில் விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் காவலுக்காக ஒருவரை நியமிப்பதுண்டு. இரவில் விளை பொருட்கள் களவு போகாமலும், வனவிலங்குகள் விளை நிலங்களை நாசம் செய்யாமலும் பார்த்துக் கொள்வது இவரது பணி. ஆனால் நாகரிகம் வளர வளர விவசாய நிலங்கள் அளவு குறைந்து விட்டது. குறைவான பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள் இரவு நேர காவலுக்கு ஆட்களை நியமிப்பதில்லை.

மின்வேலி

மாறாக மின் வேலியை அமைத்து விடுகின்றனர். இந்த மின் வேலியில் இரவு நேரம் முழுவதும் மின்சாரம் பாய்ச்சப்படும். அந்த நேரத்தில் வனவிலங்குகள் குறிப்பாக பன்றிகள் கூட்டமாக வந்து விளைபொருட்களையும், நிலங்களையும் நாசம் செய்துவிடும். விவசாயிகள் அவைகளிடமிருந்து காட்டை காக்க  இதனால் இந்த மின்வேலி அமைப்பதை வழக்கமாக்கி கொண்டனர். அந்த வகையில்  அரக்கோணம் அருகே அசநெல்லிக்குப்பம் பகுதியில் பன்றிகளுக்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அங்கு சுற்றுவட்டாரப் பகுதியில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு காட்டுப்பாதையில் சென்றால் சீக்கிரம் வீடு திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் கல்லூரி மாணவர் அந்த வழியாக சென்றார்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

அவருக்கு மின் வேலி அமைக்கப்பட்டது தெரியாமல் மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வயலின் உரிமையாளர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web