தோழியின் அறைக்கு வாலிபருடன் சென்ற கல்லூரி மாணவி... பரிதாபமாக உயிரை விட்ட கொடூரம்!
பெங்களூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கிப் படித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனது தோழியின் அறைக்கு வாலிபர் ஒருவருடன் சென்ற போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பிக்கிம்வாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவிஸ்ரீ (21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம். (BBM) படித்து வந்தார். படிப்புக்காக அவர் கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் தேவிஸ்ரீ, தனக்கு நன்கு பழக்கமான பிரேம் வர்தன் என்ற வாலிபருடன் பெங்களூரு வடக்கு தாலுகாவின் தம்மேனஹள்ளி பகுதியில் உள்ள தனது தோழியின் அறைக்குச் சென்றுள்ளார். அந்தக் கல்லூரி மாணவியின் தோழி வெளியே சென்றிருந்த நேரத்தில், அறையில் தேவிஸ்ரீயும், பிரேம் வர்தனும் தனியாக இருந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தகராறு முற்றிய நிலையில், பிரேம் வர்தன் திடீரென ஆத்திரம் அடைந்து, கூர்மையான ஆயுதத்தால் கல்லூரி மாணவி தேவிஸ்ரீயைக் கொடூரமாகத் தாக்கி, கொலை செய்துள்ளார். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிறகு, பிரேம் வர்தன் அங்கிருந்து உடனடியாகத் தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். இது குறித்துத் தகவல் கிடைத்ததும் மத நாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி தேவிஸ்ரீயின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவி பிரேம் வர்தனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிரேம் வர்தனைத் தேடி வருகின்றனர். அவர் என்ன காரணத்திற்காக மாணவியைக் கொலை செய்தார், அவர்கள் இருவருக்கும் இடையே என்ன மாதிரியான பிரச்சினை இருந்தது என்பது குறித்து முழுமையாகத் தெரியவில்லை. பிரேம் வர்தனைக் கைது செய்தால் மட்டுமே கொலைக்கான முழு காரணங்களும் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
