உறவுப் பெண்ணின் காதலுக்கு உதவிய கல்லூரி மாணவி... பயத்தில் தற்கொலை!

 
மாணவி இளம்பெண் தற்கொலை தூக்கிட்டு

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தான் தங்கிப் படித்து வந்த உறவினர் மகளுக்கு ஒரு வாலிபருடன் பேசுவதற்குச் செல்போன் கொடுத்து உதவியதால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தண்டிக்கக்கூடும் என்ற அச்சத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், மதுரவாயலில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து, அங்கிருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், உறவினர் வீட்டில் தங்கி இருந்த மற்றொரு 14 வயதுச் சிறுமிக்கும், நவீன்குமார் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 24ம் தேதி நவீன்குமார், ஆசை வார்த்தை கூறி 14 வயதுச் சிறுமியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் பதறிப்போன பெற்றோர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், போலீசார் 14 வயதுச் சிறுமியை மீட்டனர்.

மாணவி பாலியல் இளம்பெண் பலாத்காரம் உல்லாசம்

மாணவியைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற நவீன்குமாரை, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட மகளுடன் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பினர். அப்போது வீட்டில் தங்கிப் படித்து வந்த கல்லூரி மாணவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மதுரவாயல் போலீசார், உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்தான், இந்தத் தற்கொலைக்கான சோகமான பின்னணி தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த கல்லூரி மாணவி தான், உறவினரின் மகளான 14 வயதுச் சிறுமி நவீன்குமாருடன் பேசுவதற்குத் தனது செல்போனைக் கொடுத்து உதவியுள்ளார் என்பது தெரியவந்தது.

கல்லூரி இளம்பெண்  மாணவி

சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் தான் செல்போன் கொடுத்து உதவிய தகவல் வெளியே வந்து விட்டதால், தன்னை நிச்சயம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடுமையாகத் தண்டிப்பார்கள் என்ற பயம்  அந்தக் கல்லூரி மாணவியின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்தக் கடும் அச்சத்தின் காரணமாகவே, அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

உதவி செய்த நல்லெண்ணம் காரணமாகத் தண்டிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் கல்லூரி மாணவி தன் உயிரையே மாய்த்துக் கொண்ட இந்தச் சம்பவம், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!