ஆன்லைன் வர்த்தகத்தில் வந்த வினை.. கல்லூரி மாணவி தற்கொலை !!

 
மகாலட்சுமி

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவில் அருண்குமார்- சாந்தி தம்பதி வசித்து வந்தனர். எனினும் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி (19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மகாலட்சுமி

மாணவி மகாலட்சுமி எப்போதும் சமூக வலைதளத்திலேயே மூழ்கி கிடப்பார் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதில் அவர் சிறிய தொகை இழந்து வந்துள்ளார். அதன்பிறகு தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட அவர், ரூ.30 ஆயிரம் வரை பணத்தை கட்டி இழந்துவிட்டார். 

பங்கு வர்த்தகத்தில் 30 ஆயிரம் ரூபாய் வரை மகள் இழந்ததை அறிந்த தாய் சாந்தி, குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி பணத்தை வீணடித்துவிட்டாயே என திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி, வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகாலட்சுமி

இதனை பார்த்து சாந்தி கதறி துடித்துள்ளார். சம்பவம் குறித்து அறிந்த முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . ஆன்லைன் வர்த்தகத்தில் 30 ஆயிரம் பணத்தை இழந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!