மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி... வைரலான வீடியோ... திணறிய மலைக் கோட்டை!

கடந்த சில நாட்களாக கூமாபட்டி வைரலான நிலையில், மகாராஷ்டிரத்தின் மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
சமீபத்தில் வைரலான விருதுநகர் மாவட்டத்துக்கு அருகிலுள்ள கூமாபட்டிக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறது அதே இளைஞர் பட்டாளம்.
Another major incident waiting to happen.?
— Woke Eminent (@WokePandemic) June 26, 2025
Harihar Fort weekend crowd surge is death trap!!
This needs to be stopped/moderated else One minor stampede or someone loosing balance and it will have cascading effect and hundreds will will fall to there death.
Tag related… pic.twitter.com/6y7IfU2D3J
Another major incident waiting to happen.?
— Woke Eminent (@WokePandemic) June 26, 2025
Harihar Fort weekend crowd surge is death trap!!
This needs to be stopped/moderated else One minor stampede or someone loosing balance and it will have cascading effect and hundreds will will fall to there death.
Tag related… pic.twitter.com/6y7IfU2D3J
"தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனித்தீவு, ஊட்டி, கொடைக்கானல் போகத் தேவையில்லை, கூமாபட்டிக்கு வாங்க..." என கூமாபட்டி பற்றி இன்ஸ்டா பிரபலம் ஒருவர் பதிவிட்ட ரீல்ஸ் விடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் கூமாபட்டி நோக்கி படையெடுக்க, யாரும் இங்கு வர வேண்டாம் என அலற வைத்து விட்டனர்.
இந்தியாவிலேயே மிகவும் ஆபத்தான மலையேற்றப் பகுதியாக அறியப்படும் மகாராஷ்டிர மாநிலத்தின் உயரமான மலை மீது அமைந்திருக்கும் ஹரிஹர் கோட்டை வைரலாகி வருகிறது.
ஹரிஹர் கோட்டைக்கு சரியான படிகளெல்லாம் கிடையாது. மலையிலேயே படிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மலையேற்ற வீடியோவை இணையதளவாசிகள் இன்ஸ்டா ரீல்ஸ்களில் வெளியிட இந்த மலையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளது இளைஞர் பட்டாளம்.
ஹரிஹர் மலை சுமார் 3,676 அடி உயரமுடையது. 60-70 டிகிரியில் செங்குத்தாக மலைகளிலேயே படிகள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. மிகவும் குறுகலான பாதையில் ஒருவர்- ஒருவராக ஏறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. 'விழுந்தால் எலும்புகூட மிஞ்சாது' எனப் பதிவிடப்பட்டுள்ள கமெண்டுகளிலேயே தெரிகிறது இந்த மலையின் ஆபத்து.
இந்த மலையில் ஒரே நேரத்தில் 300 பேருக்கு மட்டுமே அனுமதி என்கிற நிலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருப்பதால், கூட்டநெரிசலில் சிக்கித் தவறி விழும் பட்சத்தில் குறைந்தபட்சம் 100 பேர் பலியாவதற்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆபத்தை உணராத அந்த இளைஞர் பட்டாளம் சாரை, சாரையாக அந்த மலைமீது ஏறி விடியோ வெளியிடுவதிலேயே மும்முரம் காட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!