திமுகவில் விரிசலா?! ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நேரு ஆதரவாளர்கள்!

 
திருச்சி சிவா

அதிமுக சிதறுகிறது என்று இது நாள் வரையில் சொல்லி வந்த அரசியல் விமர்சகர்கள் இன்று திருச்சியில் நிகழ்ந்த சம்பவத்தை அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள். திமுகவின் எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டில், திமுக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் இன்று திடீரென தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

அமைச்சர் நேருவின் கண்ணசைவு இல்லாமலோ அல்லது தனக்கு கறுப்புக் கொடி காட்டியது குறித்து அவரது அதிருப்தி பார்வை இல்லாமலோ இந்த தாக்குதல் நடந்திருக்காது என்கிறார்கள் திருச்சி மக்கள். ஒரு காலத்தில்... ஆமாம்... முன்னொரு காலத்தில் மதுரையில் மு.க.அழகிரி எப்படியோ அப்படி இப்போதும் திருச்சியில் கே.என்.நேருவின் செல்வாக்கு ஓங்கி உயர்ந்து மலைக்கோட்டை உசரத்தில் நிற்கிறது.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல திருச்சி என்றால் நேரு தான் என்பது திமுகவில் எப்போதுமே எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் நேருவுக்கு கறுப்பு கொடி காட்டியதால் திருச்சியில் திமுக எம்பி சிவா வீட்டில் திடீரென அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ். பி. ஐ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு  குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார்,  நகர பொறியாளர் சிவபாதம்,  மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நேரு

விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் ராஜ்யசபா எம்.பி., சிவாவின் பெயர் இடம் பெறவில்லை.ஆனால், அவரதுவீடு உள் நியூ ராஜா காலனி வழியாக தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர். அரசு திட்டத்தில் விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில்,  ராஜ்யசபா எம்பியான சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது, அவரது  ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர்  மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டி உள்ளனர்.

சிவா நேரு கார் கண்ணாடி

இருப்பினும், அமைச்சரும் அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இறகுப்பந்து விளையாட்டு  அரங்கம் திறப்பு   விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்பி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மட்டும் வீட்டு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து  தகவல் அறிந்த கண்டோன்மென்ட் போலீசார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட ஆதரவாளர்கள் 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். திருச்சியில் அதுவும் ஆளும் கட்சியான திமுக எம்.பி வீட்டில் அவரது கட்சிக்காரர்களான திமுக அமைச்சரின் ஆதரவாளர்களே புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

 

From around the web