வெறிச்சோடிய விமான நிலையம்...உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வருகை குறைந்தது!
இண்டிகோ விமானச் சேவைகள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டு வருவதாலும், விமான டிக்கெட்களின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாலும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த ஆறு நாட்களாக இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகப் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாகக் கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டு வருவதால், வழக்கமாகப் பரபரப்பாக இயங்கும் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்துத் தெரிவிக்கையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், மற்ற விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதாலும் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. ஓரிரு நாட்களில் இண்டிகோ விமானச் சேவைகள் சீரான பிறகு, விமான நிலையம் மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
