ராஜமௌலியுடன் கைகோர்க்க ஆசை… ஜேம்ஸ் கேமரூனின் சர்ப்ரைஸ்!

 
ஜேம்ஸ்
 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இது அவதார் தொடரின் இறுதிப் பகுதியாக இருக்கலாம் என்பதால், பல ஆயிரம் கோடி வசூல் செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இணையம் வழியாக ஜேம்ஸ் கேமரூனுடன் உரையாடினார்.

அப்போது ராஜமௌலி, “145 கோடி இந்தியர்கள் அவதார்-3 படத்தைப் பார்க்கும் ஒரே காரணம் ஜேம்ஸ் கேமரூனே” என பாராட்டினார். இதைக் கேட்டு மகிழ்ந்த கேமரூன், ராஜமௌலியின் படைப்புகளை பாராட்டினார். உலக சினிமாவில் இந்திய இயக்குநர்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசினார்.

ஜேம்ஸ் கேமரூன்
 

மேலும், “நீங்கள் எடுத்து வரும் வாரணாசி படத்தில் புலிகளுடன் காட்சிகள் இருந்தால் என்னையும் அழையுங்கள். உங்கள் படப்பிடிப்புக்கு வந்து, கேமராவை தோளில் சுமந்து காட்சிகள் எடுப்பேன். என்னை உங்கள் இரண்டாம் யூனிட் இயக்குநராகவே நினைத்துக்கொள்ளுங்கள்” என கேமரூன் கூறினார். உலகின் முன்னணி இயக்குநர் ராஜமௌலியுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!