படம் பார்த்து கொண்டிருந்த போது ரசிகையின் தலையில் விழுந்த கட்டை... பாதியில் நிறுத்தப்பட்ட ‘குட் பேட் அக்லி’!

தமிழ் சினிமாவில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.30.9 கோடி வசூலித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில், குட் பேட் அக்லி படம் பார்த்து கொண்டிருந்த ரசிகையின் தலையில் கட்டை விழுந்ததால் தியேட்டர் ஊழியர்களுடன் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அஜித் படத்தை பாதியிலேயே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களை குரோம்பேட்டை போலீசார் சமாதானம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!