கடனுக்காக கிட்னியை இழந்த விவசாயி... கந்து வட்டி கும்பல் கொடூரம்!

 
கடன்
 

காராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ் குடே, விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 2021ம் ஆண்டு ரூ.1 லட்சம் கந்துவட்டிக்கு கடன் வாங்கினார். பின்னர் பால் வியாபாரம் தொடங்கியதும் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தார்.

பணத்தை கேட்டு கந்துவட்டி கும்பல் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் கடனை அடைக்க கிட்னியை விற்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர். வேறு வழியின்றி சம்மதித்த ரோஷனை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஒரு கிட்னியை அகற்றினர். இதற்காக ரூ.8 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த பணத்தையும் கந்துவட்டி கும்பலே கைப்பற்றியுள்ளது. ஊருக்கு திரும்பிய விவசாயி நடந்த அநியாயம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிட்னி அகற்றிய கொல்கத்தா டாக்டர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!