தக்காளியால் ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன விவசாயி!!

 
தக்காளி

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்மழை , விளைச்சல் , வரத்து குறைவு காரணமாக நாடு  முழுவதும்  தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ 140 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் தக்காளி ஒரு கிலோ ரூ100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில், தக்காளி விவசாயி ஒரே மாதத்தில் 1 கோடியே 50 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.  

தக்காளி

மகாராஷ்டிரா   மாநிலத்தில்  புனே மாவட்டம் நாராயண்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர்   துகாராம் பஹொஜி கெய்கர். இவர் தன்னுடைய   18 ஏக்கர் விவசாய நிலத்தில்   12 ஏக்கரில் துகாராம் தக்காளி பயிரிட்டார்.   துகாராம் அவரது மகன் ஈஸ்வர் மருமகள் சோனாலி ஆகியோர் இணைந்து தங்கள் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளனர்.   தேவையான அளவு உரம் பயன்படுத்தி, பூச்சி, புழுக்கள் பாதிப்பில் இருந்து தக்காளிச் செடிகளை இவர்கள் வளர்த்து வந்த நிலையில் தற்போது தக்காளிச் செடிகள் நல்ல விளைச்சல் கொடுத்து வருகின்றன. தற்போது தக்காளி கிலோ ரூ100 க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் துகாராம் பஹொஜி கெய்கர் குடும்பத்திற்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

தக்காளி

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் துகாராம் பஹொஜி கெய்கர் 13000   தக்காளிப்பெட்டிகள் விற்பனை செய்துள்ளார். ஒரு தக்காளி பெட்டி சராசரியாக ரூ1,000  முதல் ரூ2400 வருமானம் ஈட்டியுள்ளார். 13000 தக்காளி பெட்டிகள் விற்பனை செய்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக துகாராம் ஒரு மாதத்தில் ரூ1 கோடியே 50 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார்.  நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு பெட்டி அதாவது  20 கிலோ  தக்காளி ரூ 2100 விகிதத்தில் 900 தக்காளிப்பெட்டிகளை விற்பனை செய்து ரூ18 லட்சம்  வருமானம் ஈட்டியுள்ளார். துகாராமை போன்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு விவசாய குடும்பம் ரூ2000  தக்காளி பெட்டிகளை சந்தையில் விற்பனை செய்து ரூ38 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web