பகீர் வீடியோ... நடுரோட்ல குழந்தையை இறக்கிவிட்டு செல்லும் தந்தை... அழுது கொண்டே தவழும் குழந்தை!

 
குழந்தை
 

குழந்தை வளர்ப்பில் பாசத்தைக் காட்டி வளர்ப்பதில் இந்தியர்களை யாரும் அடிச்சுக்க முடியாது போல. குட் டச், பேட் டச் போலவே ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ ரெண்டு மூணு வயசுக்கு மேலேயே தொட்டு பேசுவது பல நாடுகளில் தடை செய்யப்பட்ட விஷயமாக இருக்கிறது. இந்நிலையில், வியட்நாமில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பரபரவென வாகனங்கள் விரைந்தோடும் சாலை ஒன்றில், இருசக்கர வாகனத்தில் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு ஓட்டி வரும் நபர் ஒருவர்,  சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தி தனது முன்னால் இருந்த குழந்தையை அப்படியே நடுரோட்டில் இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

அந்த குழந்தையையும் நடுரோட்டில் இருந்து அழுதபடியே தவிழ்ந்துக் கொண்டே சாலையை கடந்து செல்கிறது. இதைப் பார்த்த அந்த பகுதியில் இருக்கும் மக்கள், உடனடியாக ஓடிச் சென்று குழந்தையை வாகன இரைச்சல்களில் இருந்து மீட்கின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது