அழகு தேவதைகளாக மாறிய ஆண்கள்.. பெண்களைப் போல ஜொலித்த கோவில் திருவிழா!

 
கோட்டங்குளங்கர

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும் ஆண்களும் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. எனினும் அனுமதி இல்லாததால் பின்பு ஆண்களும் பெண்கள் போல் வேடமிட்டு அலங்காரம் செய்து வழிபாடுகள் செய்ய தொடங்கினர். இதனையடுத்து ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் ஆண்கள் பெண்கள் போன்று மாறி வழிபடுகின்றனர். 

கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கோவில் வந்து பெண்கள் போல் வேடமணிந்து, அலங்காரமும் செய்து சமைய விளக்கு என்னும் சடங்கை செய்வது வருகின்றனர். 

கோட்டங்குளங்கர

அந்த வகையில் கடந்த 26 ஆம் தேதி நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்ட ஆண்கள் ஏராளமானோர் பெண்கள் போல் வேடம் அணிந்து கொள்ளை அழகுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனால் திருவிழா வழக்கத்தைவிட களைகட்டியது.

ஆண்களுக்கு ஆடை, அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான கலைஞர்களும் அதே பகுதியில் குவிந்தனர். இங்கு வரும் ஆண்கள்,  பெண்களை விட மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் அலங்காரம் செய்து கையில் விளக்குடன் இந்த கோவிலை வலம்வந்தனர். 

கோட்டங்குளங்கர

இதில் இன்னொரு வியத்தகு என்னவென்றால், பல ஆண்கள், பெண்கள் போன்று அலங்காரமிட்டு தங்களது மனைவிகளுடன் சுற்றிவந்தனர். மனைவியே பார்த்து பொறாமை அடையும் அளவில் இவர்கள் அலங்காரம் இருக்கும். இதைப் பார்க்கும் பெண்களுக்கு ஆண்கள் மேல் மரியாதையும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.  மகளிர் வேடமிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web