போர் விமானம் பள்ளி மீது வெடிகுண்டு தாக்குதல் .. 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி !
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள், கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றனர். பாங்காக், மியான்மர் நாட்டில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங் சான் சூகியின் தலைமையிலான அரசை கவிழ்த்தது. இதனையடுத்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றன. இதில் 6,600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய மியான்மரின் தபாயின் நகரத்தில் உள்ள கிராமத்தின் மீது நேற்று காலை 9 மணிக்கு ராணுவத்தினர் விமானங்களில் இருந்து தாக்குதலை தொடர்ந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பள்ளிக்கூடம் மீது ஒரு போர் விமானம் வீசிய வெடிகுண்டு விழுந்து வெடித்தது. இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போராட்டக்காரர்கள் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டனர்.

இந்த கொடூர தாக்குதலில் 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் அருகிலுள்ள 3 வீடுகள் சேதமடைந்தன. இதேபோன்று, 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கிராமத்தின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதலில் 160 பேர் வரை கொன்று குவிக்கப்பட்டனர். இந்த வான்வழித் தாக்குதல் குறித்த தகவல்களை ராணுவ அரசாங்கமோ, ஊடகங்களோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
