கொடூரம்... படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக 5 வயது சிறுமிக்கு சூடு வைத்த வளர்ப்பு தாய்!
நேபாளத்தை சேர்ந்த முகமது இம்தியாஸ், தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே கிழக்கேமுறி பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த நூர் நாசர் என்கிற ரூபி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த குடும்ப வாழ்க்கை வெளியில் சாதாரணமாகவே தெரிந்தது.

அங்கன்வாடி மையத்தில் இருந்த 5 வயது சிறுமி உட்கார முடியாமல் சிரமப்படுவதை கவனித்த பணியாளர், காரணம் கேட்டார். அதற்கு, படுக்கையில் சிறுநீர் கழித்ததாக கூறி வளர்ப்பு தாய் உடலில் சூடு வைத்ததாக சிறுமி தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர் உடனடியாக வாளையார் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரூபி தொடர்ந்து சிறுமியை சூடு வைத்து துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரூபியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
