மாஸ் வீடியோ... விடாமுயற்சியுடன் ஒரு விளையாட்டு ... குட் பேட் அக்லி அப்டேட்!

 
குட் பேட் அக்லி
 

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி திரைப்படம். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  ஏப்ரல் 10 ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்திருப்பதால்  படத்திற்கான வணிகமும் பெரிதாக இருக்கும் என்றே தெரிகிறது. முக்கியமாக, உலக அளவில் 2000 திரைகள் வரை திரையிடப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 நடிகர் அஜித் தனது பட வேலைகளை முடித்து கார் ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. அதனால் குட் பேட் அக்லி படத்தை மிகவும் நம்பியுள்ளார்கள்.  இந்நிலையில் அஜித்தின் கார் வீடியோக்களை  இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.

அதில் “உங்களது கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் பலன் கிடைக்கும் சார். இது மிகவும் கடினமான விடாமுயற்சியுள்ள ஒரு விளையாட்டு. நீங்கள் இதற்காக உங்களை அர்பணித்ததும் கடினமாக உழைத்ததுக்கும் மிகவும் பெரிய விஷயம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்க வேண்டும் சார். உங்களை நேசிக்கிறேன் சார்” எனப் பதிவிட்டுள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web