பரோட்டாவிற்காக ஹோட்டலை சூறையாடிய கும்பல்... பரபரப்பு!

 
புரோட்டா
 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு உசிலம்பட்டி பிரிவு பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் உச்சப்பட்டியைச் சேர்ந்த இளங்கோ (50), பரோட்டா எண்ணிக்கை தொடர்பான தகராறால் அச்சுறுத்தும் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். கடந்த 5-ம் தேதி, அந்தப் பகுதியைச் சேர்ந்த இருவர் ஹோட்டலில் 10 பரோட்டா உள்ளிட்ட உணவுகளை பார்சல் வாங்கிச் சென்ற நிலையில், மீண்டும் வந்து ‘10க்கு பதிலாக 8 பரோட்டாதான் இருக்கிறது’ என புகார் தெரிவித்துள்ளனர். தவறு ஏற்பட்டதாகக் கூறிய இளங்கோ, உடனடியாக இரண்டு பரோட்டாவை வழங்கி அனுப்பினார்.

ஆம்புலன்ஸ்

ஆனால் சற்று நேரத்திலேயே 10 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்குள் புகுந்து, “10 பரோட்டா கேட்டா 8தானா தருவ” என கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது. மீதி இரண்டு பரோட்டாவை ஏற்கனவே கொடுத்து அனுப்பியதாக இளங்கோ விளக்கியபோதும், அதை பொருட்படுத்தாத அந்த கும்பல் ஊழியர்களுடன் தள்ளுமுள்ளு ஈடுபட்டு, அங்கு பரபரப்பான சூழலை உருவாக்கியது.

போலீஸ்

ஹோட்டலில் சிசிடிவி இருப்பதை கண்ட அந்த கும்பல், கேமரா கவரேஜ் இல்லாத பகுதிக்கு சென்று நாற்காலி, டேபிள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடியது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஹோட்டல் உரிமையாளர் இளங்கோ வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!