இளைஞர்களே உஷார்!! இளம்பெண்களின் ஆபாச படங்களை அனுப்பி பணம், நகை பறிப்பு !!

 
சுந்தர்

சென்னை பட்டாபிராம் நேரு நகர் சேர்ந்த சுந்தர் (36) என்பவர், தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் சுந்தரின் செல்போனுக்கு திடீரென ஆபாசப் படங்கள் வந்துள்ளது.

அந்த ஆபாச படங்களை பார்த்த சிறிது நேரத்தில் வந்த குறுந்தகவலில், எங்களிடம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிய இளம்பெண்கள் உள்ளனர். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கல் உல்லாசம் அனுபவிக்கலாம். இதற்காக குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என கூறப்பட்டிருந்தது.

சுந்தர்

இதை பார்த்து மோகமடைந்த சுந்தர், குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த கும்பல் சுந்தரை குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துள்ளனர். இதை நம்பி சுந்தரும் அங்கு இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்ற மகிழ்ச்சியில் சென்றுள்ளார். ஆனால், அவர்கள் கூறிய இடத்தில் காத்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், சுந்தரை சுற்றி வளைத்து சரமாரி தாக்கினர். அதோடு, அவர் அணிந்திருந்த தங்க செயின், 2 மோதிரம், செல்போன், பணம் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

என்ன நடந்தது என சுந்தர் சுதாகரிப்பதற்குள் இவை அனைத்தும் நடந்துமுடிந்துவிட்டது. பின்னர் ஆசையை தூண்டி ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர், ரத்தம் சொட்டிய நிலையில் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் 3 பேரை பிடித்தது விசாரணை நடத்தினர்.

சுந்தர்

விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த  கார்த்திக் (25), அஜித்குமார் (எ) ராகுல் (25), கிருபாசங்கர் (22) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் சுந்தரின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி, அதன்மூலம் அவரிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டம்போட்டு அவரை வரவழைத்தது தெரியவந்தது.

பின்னர் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பணம், செல்போன், லேப்டாப், தங்க செயின் மற்றும் 2 மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web