மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு செருப்பு மாலை ... !
கர்நாடக ஹாவேரி மாவட்ட சவனூர் அரசு உருது பள்ளியில் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் ஆசிரியர் தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்பட்டது. பெற்றோரிடம் சொல்வேன் என்று மாணவி கூறியபோது, வகுப்புக்கு வர முடியாது என்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி தன்னிடம் நடந்ததை பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் பள்ளிக்கு சென்று ஆசிரியரை வெளியே அழைத்து வந்து போலீசில் ஒப்படைத்தனர். மாணவி முறையிட்டதை தொடர்ந்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
39 வயதான ஜெகதீஷ் என்கிற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும் பல மாணவிகளுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
