நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... 30 அடி உயரத்தில் ஜிப் லைனில் சவாரி ... கயிறு அறுந்து கீழே விழுந்த சிறுமி!

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் மணாலியில் ஜூன் 8ம் தேதி, சுற்றுலா சென்றிருந்த 12 வயது சிறுமி ஒருவர் ஜிப் லைன் பயணத்தில் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூரில் வசித்து வருபவர் த்ரிஷா பிஜ்வே என்ற சிறுமி, தனது பெற்றோர்களுடன் மணாலிக்கு விடுமுறை பயணமாக வந்திருந்தார். ஜிப் லைனில் சவாரி செய்யும்போது நடுவழியில் கயிறு அறுந்து, தரையில் நேராக விழுந்தார்.
HP : मनाली में जिप लाइन टूटने से नागपुर की त्रिशा 30 फीट गहरी खाई में जा गिरी। वो घायल है और अस्पताल में इलाज चल रहा है। pic.twitter.com/mtO3zTubHk
— Sachin Gupta (@SachinGuptaUP) June 15, 2025
இதனால், அவரது காலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. முதலில் மணாலியின் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சந்திகர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவத்திற்கு பின்னர், த்ரிஷாவின் குடும்பத்தினர், சம்பவ இடத்தில் எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லை எனவும் விபத்துக்குப் பிறகு உடனடி உதவியும் கிடைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
த்ரிஷாவின் தந்தை, தனது மகள் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம், சுற்றுலா பயணங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!