எடைக் குறைப்புக்கு தினமும் ஒரு டம்ளர் காரட் ஜூஸ்....!

 
காரட் ஜூஸ்

இயற்கையின் கொடையாக நமக்கு கிடைத்த ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியம் சிறக்கவும், நமது உடல் வாகுக்கு ஏற்பவும் குறிப்பிட்ட வகை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதன்படி கண்ணைபறிக்கும் நிறத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரட்டில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.  கேரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. இதில் விட்டமின் ஏ   ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.  கேரட்டை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் உட்கொள்ளலாம்.  கேரட்டின் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சத்துக்களை பெறலாம்.  

காரட் ஜூஸ்
கேரட்டில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டீன்   பார்வைக் குறைபாடுகளை சரிசெய்யும். பார்வை தெளிவாக தெரியவும், கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கேரட் பெரிதும் உதவி புரியும்.  காலையில் வெறும் வயிற்றில்  தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ்   முதுமைக்கான அடையாளங்களைத் தடுக்க உதவி புரிவதோடு, சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.  வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளன.  தினமும் இந்த ஜூஸை குடிக்கும் போது, சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும், இளமையாகவும் காட்சியளிக்கிறது.   செரிமான மண்டலம் சீராக இயங்க உதவி புரிகிறது.   கேரட்டில் கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் இரண்டுமே இருப்பதால் இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும்.  

உடல் எடை

கேரட்டில்  உள்ள கரோட்டினாய்டுகள் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸை குடிக்கும் போது, அந்த ஜூஸில் உள்ள முழு சத்துக்களும் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கும்.  அதில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருப்பதோடு, கண்ட உணவுகளின் மீதான ஆர்வத்தைக் குறைக்கும். அதுவும் கேரட் ஜூஸ் உடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடித்தால் உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையும். கேரட் ஜூஸ்  உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள மற்றும் பராமரிக்க உதவி புரிகிறது.   கேரட் ஜூஸில் உள்ள பொட்டாசியம்  உடலில்   கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இதன் விளைவாக இதய நோயின் அபாயம் குறைகிறது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web