மருத்துவமனையில் புகுந்த நல்ல பாம்பு.. !! பதறியடித்து ஓட்டம் பிடித்த நோயாளிகள் !

 
புதுச்சேரி

புதுச்சேரி நகர பகுதி முதலியார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான மக்கள் இருந்தனர். நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். வெளிநோயாளிகளாகவும், அவர்களின் உறவினர்களாகவும் பலரும் அங்கு இருந்தனர். அந்த வேளையில் பாம்பு ஒன்று செவிலியர் அறைக்குள் புகுந்துள்ளது.

இதனை பார்த்த செவிலியர், அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

புதுச்சேரி

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் நாகராஜ் மற்றும் கோபி மருத்துவமனை ஷெல்ஃபில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த நல்ல பாம்பை வனத்துறையிடம் கொண்டு ஒப்படைத்தனர். மக்கள் அதிகம் வந்து போகும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

பின்னர் மருத்துவமனைக்கு சென்று வனத்துறையினர் பார்வையிட்டனர். அப்போது அருகில் இருக்கும் புதர்கள் மற்றும் தேவையில்லாத செடிகளை அகற்ற வனத்துறை ஊழியர்கள் அறிவுறுத்தி சென்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web