தலைக்கவசத்துக்குள் பதுங்கிய நல்ல பாம்பு.... பரபரப்பு வீடியோ!

 
பாம்பு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மானவ் சேவா நகர் பகுதியில் வசிக்கும் மிடாலி சதுர்வேதி வீட்டில் வைத்திருந்த இருசக்கர வாகன தலைக்கவசத்திலிருந்து மதியம் சுமார் 2 மணியளவில் சீறல் சத்தம் கேட்டது. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அருகில் சென்று பார்த்தபோது, தலைக்கவசத்தின் உள்ளே நல்ல பாம்பு பதுங்கியிருந்தது.

இதைக் கண்ட குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்தவுடன் அப்பகுதியில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அழைக்கப்பட்ட பாம்பு பிடி நிபுணர் சுபம், சுமார் நான்கு அடி நீளமுள்ள அந்த நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தார்.

பிடிக்கப்பட்ட பாம்பு பின்னர் அருகிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மழைக்காலங்களில் பாம்புகள் வெப்பத்தைத் தேடி வீடுகள், வாகனங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் புகும் என்பதால், தலைக்கவசம் மற்றும் காலணிகளை அணியும் முன் அவற்றை நன்கு சோதிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!