நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து... பள்ளி மாணவர்கள் தள்ளிச் சென்ற கொடுமை!

 
அரசுப் பேருந்து

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து துறை அதள பாதாளத்திற்கு இறங்கி கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறிக் கொண்டே மகளிர் இலவசப் பயணம் என்று திமுக தேர்தல் லாபத்திற்காக வாக்குறுதி கொடுத்து, பின் ஓசி பயணம் என்று அமைச்சர்கள் நக்கலுடன் பெண்களை அசிங்கப்படுத்தினார்கள். இப்போது அதிமுகவும் இதை தேர்தல் அஸ்திரமாக பயன்படுத்தக்கூடும். மொத்தத்தில் முறையான பராமரிப்பு குறித்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், முன்னேற்றம் குறித்து கவலைப்படப் போவதில்லை என்று மக்கள் புலம்ப துவங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில், திருவாரூரில், புத்தகத் திருவிழாவுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற அரசுப் பேருந்து ஒன்று, நடுரோட்டில் திடீரென பழுதாக நின்றதால், மாணவர்கள் கீழறங்கி, பேருந்தை தள்ளிச் சென்ற துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனங்களைக் குவித்து வருகிறது.

மாணவர்களுக்கு இலவசம்!! ஜனவரி 6 முதல் சென்னையில் புத்தக கண்காட்சி!!

திருவாரூர் மாவட்டத்தில் 4-வது புத்தகத் திருவிழா பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு, மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டு பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து, பவித்திரமாணிக்கம் பகுதியில் சிறிது தூரத்தில் பழுதாகி சாலையோரத்தில் நின்றது.இதையடுத்து, மாணவர்கள் பேருந்தை சிறிது தூரம் தள்ளிச் சென்றனர். இருப்பினும், பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் பின்னர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் பேருந்தை தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தக கண்காட்சி

சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், புத்தகத் திருவிழாவுக்கு அனுப்பப்படும் பேருந்துகளை முழுமையாக ஆய்வு செய்த பின் மட்டுமே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!