மனித குலத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்... மக்கும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு... விஞ்ஞானிகள் சாதனை!

கடலில் உள்ள கழிவுகள் மற்றும் மாசுபாடு பல வருடங்களாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் மிக கடுமையான ஒன்றாக இருந்து வருகிறது. கடலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களால் கடல்வாழ் உயிரினங்களின் இறப்பு விகிதமும் அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில் இதற்கு ஒரு மாற்று தீர்வைக் கண்டுபிடித்திருப்பது திருப்புமுனை யை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஜப்பானின் ரிகென் (RIKEN) அவசர பொருள் அறிவியல் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடல் நீரில் கரையும் வகையிலான மக்கும் பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். அதே சமயம் இந்த பிளாஸ்டிக் வலிமையானதாக மட்டுமல்லாமல் பல்துறை திறன் கொண்டதாகவும் உள்ளது. இது பேக்கேஜிங் பொருட்கள் முதல் மருத்துவ சாதனங்கள் வரை பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.
இந்த பிளாஸ்டிக்கின் முக்கிய அம்சம் அதன் கட்டமைப்பில் உள்ளது. இதில் உணவுக்கு பாதுகாப்பான பொருட்களும் அடங்கும். இதன் பொருள் அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் நச்சுத்தன்மையற்றவை மற்றும் பல்வேறு தொழில்களுக்கு பாதுகாப்பானவை.
பல நூற்றாண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் பிளாஸ்டிக்குகளைப் போல் அல்லாமல், இந்த மக்கும் தன்மை கொண்ட மாற்று பிளாஸ்டிக் விரைவாக சிதைந்து, மக்குகிறது.
வழக்கமான பிளாஸ்டிக்குகள் சிதைவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும். பல வருடங்கள் கழிந்தாலும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காத நிலையில், கடல்களிலும், சுற்றுச்சூழல் அமைப்பையும் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகளாக்குகின்றன. கடல்களில் மட்டுமல்லாமல் காடுகளிலும் பிளாஸ்டிக் பொருட்களால் வனவிலங்குகளுக்கும் பெரும் ஆபத்து நிகழ்ந்து வருகிறது. பல இடங்களில் மான்கள், யானைகள் காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில், வயிற்றுப் பகுதிகளில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை மருத்துவர்கள் அகற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஏன்? நகர்புறங்களில் மாடுகளின் வயிற்றில் இருந்தும் கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் கவர்களை அகற்றி இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு நேர்மாறாக, RIKEN குழுவினர் உருவாக்கியுள்ள மக்கும் பிளாஸ்டிக் ஒரு சில மணி நேரங்களுக்குள் கடல் நீரில் கரைந்து, நீண்டகால சுற்றுச்சூழல் சேதத்தை கணிசமாகக் குறைக்கிறது. அதாவது இந்த பிளாஸ்டிக் 10 நாட்களுக்குள் மண்ணில் சிதைவடைந்து மண்ணின் வளத்தை வளப்படுத்துகிறது.
இந்த பிளாஸ்டிக் உடைக்கப்படும் போது அது கரிமப் பொருளாக மாறி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்கிறது மற்றும் கார்பன் உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது. அதன் இரட்டை நன்மைகள், விரைவான மக்கும் தன்மை மற்றும் மேம்பட்ட மண் வளத்துடன், இந்த பொருள் கழிவு மேலாண்மைக்கு ஒரு நிலையான மாற்றீட்டை வழங்குகிறது.
இந்த மக்கும் பிளாஸ்டிக்கின் மிக முக்கிய நன்மை என்னவென்றால், இது சிதைவின் போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதில்லை. இதற்கு நேர்மாறாக பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் சிதைவடையும் போது பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன. இது காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது.
கார்பன் வெளியேற்றத்தைத் தவிர்ப்பதன் மூலம், இந்த புதிய பொருள் உலகளாவிய கார்பன் தடயங்களைக் குறைக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும், இதை எளிதாக மறுசுழற்சி செய்யலாம், புதிய பிளாஸ்டிக் உற்பத்திக்கான தேவையைக் குறைக்கலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!