பெரும் சோகம்.. தகராறை விலக்கி விட்ட இளைஞர் அடித்துக் கொலை!

 
லலிதா

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டியில் மணிகண்டன் (26) என்பவர் தனது பெற்றோர் வசித்து வந்தார். இவர் பள்ளபட்டி தொழில்பேட்டையில் பெல்ட் நிறுவனத்தில் வேலை செய்தார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி பெருமாள்பட்டி மந்தையில் மணிகண்டனின் உறவினர் ஆனந்தகுமார், அதே ஊரைச் சேர்ந்த ஜீவா ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

லலிதா

அங்கு சென்ற மணிகண்டன், உறவினர் என்ற முறையில் இளைஞர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை விலக்கி விட்டுள்ளார். அப்போது திடீரென மணிகண்டனுக்கு ஜீவாவுடன் பிரச்சினை ஏற்பட்டது.  எனினும் அங்கிருந்தவர்கள் அவர்களை பிரித்துவிட்டனர்.

இந்நிலையில், மறுநாள் பெருமாள்பட்டி நடுநிலைப் பள்ளி அருகே மணிகண்டன் நின்றிருந்தார். அப்போது அவருடன் ஜீவா, அவரது தந்தை ராமமூர்த்தி மற்றும் அவரது தரப்பினர் தகராறு செய்து கட்டை, கம்பியால் தாக்கியதில் மணிகண்டன் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.

லலிதா

இதுதொடர்பாக ஜீவா, அவரது தந்தை ராமமூர்த்தி, லலிதா, ராஜசேகர், சூரியகலா, சரண்யா, சரத், அஜித் ஆகிய 8 பேரை வாடிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!