அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதல்... 20 பேர் படுகாயம்!

தமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று ஏப்ரல் 10ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 6 மணிக்கு கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடி செல்வதற்காக வந்தது.
ஆலப்பாக்கம் மேம்பால இறக்கத்தில் இடது புறமாக இணைப்புச் சாலையில் திரும்பிய போது, அதே வழியில் கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தும் பின்புறமாக தனியார் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த சாத்தப்பாடியில் வசித்து வரும் உதயகுமார், பூண்டியாங்குப்பம் அமிர்தவல்லி, தமிழரசி, வீரக்குமார், குள்ளஞ்சாவடி பச்சையப்பன் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை. படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!