ரஜினியுடன் ஆரோக்கியமான சந்திப்பு... வைரமுத்து ட்வீட்!

 
ரஜினி வைரமுத்து

 கவிஞர் வைரமுத்து நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து உரையாடினார். இது குறித்து  கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடு தான் வாய்க்கும் அவருள் ஒருவர் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 80 நிமிடங்கள் உரையாடியிருக்கிறோம் ஒரே ஒரு ‘கிரீன் டீ’யைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை.

இடைவெளியும் இல்லை. சினிமாவின் அரசியல். அரசியலின் சினிமா வாழ்வியல் - சமூகவியல் கூட்டணிக் கணக்குகள், தலைவர்கள், தனிநபர்கள் என்று எல்லாத் தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்தன. எது குறித்தும் அவருக்கொரு தெளிவிருக்கிறது. தன் முடிவின் மீது உரசிப் பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது. 

ரஜினி
நான் அவருக்குச் சொன்ன பதில்களைவிட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவை , தவத்திற்கு ஒருவர் தர்க்கத்திற்கு இருவர் நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக் கொண்டோம். ஒரு காதலியைப் பிரிவது போல் விடைகொண்டு வந்தேன். இரு தரப்புக்கும் அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு. அது இதுதான்  என பதிவிட்டுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!