ஹீலியம் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்...
மைசூரு அரண்மனை முன்பு குழந்தைகளுக்கான ஹீலியம் பலூன் நிரப்பும் போது காஸ் சிலிண்டர் வெடித்து பலூன் விற்பனையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிசம்பர் 25-ம் தேதி இரவு, ஜெய மார்த்தாண்டா நுழைவாயில் அருகே நடந்த இந்த விபத்து சுற்றுலா பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. வெடிப்பின் தாக்கத்தில் சிலிண்டர் சிதறி, அருகில் இருந்த மூன்று பேர் கடுமையாக காயமடைந்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமி, நஞ்சன்கூடையைச் சேர்ந்த மஞ்சுளா, கொல்கத்தாவைச் சேர்ந்த ஷஹீனா ஷப்பீர், ராணேபென்னூரைச் சேர்ந்த கொட்ரேஷ் ஆகியோர் மைசூரு கே.ஆர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த போலீசார் உடனடியாக இடத்துக்கு சென்று விசாரணை தொடங்கினர். ஹீலியம் சிலிண்டர் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டதா, உரிய அனுமதி இருந்ததா என ஆய்வு நடக்கிறது. ஒரே நாளில் கர்நாடகத்தின் பல பகுதிகளில் தீ விபத்துகள் நடந்துள்ள நிலையில், மைசூரு அரண்மனை போன்ற முக்கிய சுற்றுலா இடங்களில் பாதுகாப்பு விதிகளை கடுமையாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
