நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடு... ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்!

 
தீப்பிடித்து குடிசை எரிந்து

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த கோரத் தீ விபத்து, ஒரு ஒட்டுமொத்தக் குடும்பத்தையே சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்த துயரம் அப்பகுதி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஹவுராவின் சௌரியா கிராமத்தில் வசித்து வந்த 72 வயதான முதியவர் துர்ஜோதன் டோலுவின் குடும்பத்தினர், நேற்று இரவு வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டுத் தங்களது சிறிய குடிசை வீட்டிற்குள் உறங்கச் சென்றுள்ளனர். ஆனால், அந்த உறக்கம் அவர்களுக்கு நிரந்தர உறக்கமாக மாறும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அந்தப் பனை ஓலைகளால் வேயப்பட்ட குடிசை வீட்டின் ஒரு பகுதியில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது. குடிசை வீடு என்பதால் தீ மிக வேகமாகப் பரவி, ஒரு சில நிமிடங்களிலேயே வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் அக்கம் பக்கத்தினர் யாரும் உடனடியாகக் கவனிக்கவில்லை. வீட்டின் உள்ளே இருந்த துர்ஜோதன் டோலு, அவரது மகன், மருமகள் மற்றும் 15 வயதான இளம் பேத்தி ஆகிய நால்வரும் அடர்ந்த புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுத் தப்பிக்கக் கூட வழியின்றி வீட்டிற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

மின்கசிவால் குடிசைகள் எரிந்து நாசம்!

வீடு முழுவதும் தீப்பிடித்த பிறகு எழுந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், தீயை அணைக்கப் போராடினர். ஆனால், தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் யாராலும் உள்ளே நுழைய முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தபோது, உள்ளே இருந்த நான்கு பேரும் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் கருகிக் கரிக்கட்டையாகக் கிடந்தனர். 72 வயது முதியவர் முதல் 15 வயதுப் பள்ளி மாணவி வரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் கண் இமைக்கும் நேரத்தில் பலியானது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஹவுரா மாவட்ட போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தத் தீ விபத்து மின்கசிவு (Short Circuit) காரணமாக ஏற்பட்டதா? அல்லது சமையல் செய்யும்போது அணையாமல் இருந்த நெருப்பினால் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், யாராவது திட்டமிட்டு வீட்டின் மீது தீ வைத்தார்களா? என்ற சந்தேகத்தையும் போலீசார் ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். ஏழைத் தொழிலாளியின் குடும்பம் இப்படி ஒரு விபத்தில் மொத்தமாக அழிந்துபோனது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!