நடுக்கடலில்கப்பலில் பெரும் தீ விபத்து!! 35 பேர் பலி!!

 
ஜோலோ

பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்கு தனியாருக்கு சொந்தமான லேடி மேரி ஜாய் 3 சென்று கொண்டிருந்தது.  இந்த கப்பலில் 35 ஊழியர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் நேற்று முன்தினம் பாசிலன் மாகாணத்தில் உள்ள பலுக்-பாலுக் தீவின் அருகே சென்று கொண்டிருந்தப்போது தீடிரென தீப்பிடித்து கப்பல் முழுவதும் பரவியது.

நள்ளிரவில் நடந்த விபத்தால் கப்பலில் பயணித்தவர்களில் பலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அவர்களுக்கு தூக்க கலக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே சிறிது நேரம் ஆனது. உடனே கப்பலில் இருந்த பயணிகள் பதற்றத்தில் கடலில் குதித்துள்ளனர்.இதில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 7 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோலோ

பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை மற்றும் மீனவர்கள் உட்பட மீட்புப் படையினர் 195 பயணிகளையும் 31 பணியாளர்களையும் காப்பாற்றியுள்ளனர்.விபத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரால் நடத்தப்பட்ட சோதனையில் கப்பலிலுள்ள குளிரூட்டப்பட்ட அறையில் 31 பேரது உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டபோது மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் பீதியடைந்தனர். தீ பரவியதால் கேப்டன் கப்பலை தரையிறக்கினார். பின்பு சில பயணிகள் பயத்தில் கடலில் குதித்து நீந்தியுள்ளனர். இறந்தவர்களில் ஆறு மாத குழந்தை உட்பட குறைந்தது மூன்று குழந்தைகளாவது இருப்பார்கள், என மீட்புகுழுவினர்

ஜோலோ

தெரிவித்துள்ளனர். கப்பலிலிருந்த பயணிகளின் எண்ணிக்கை கப்பலின் மேனிஃபெஸ்ட்டில் பட்டியலிடப்பட்ட 205 ஐத் தாண்டியதால் மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம். உயிர் பிழைத்தவர்கள் ஜாம்போங்கா மற்றும் பாசிலானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர், அங்கு காயமடைந்தவர்களுக்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.     

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web