‘அயன்’ பட ஸ்டைலில் ரூ.11 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல்! விமான நிலையத்தில் பரபரப்பு!

 
அயன்

நடிகர் சூர்யாவின் அயன் திரைப்பட பாணியில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எப்போதும் பரபரப்பாக இருக்கும் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு, பிரேசில் நாட்டிலுள்ள ஸோ போலோ விமான நிலையத்திலிருந்து இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அயன்

அப்போது குறிப்பிட்ட ஒரு நபரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபரை சோதனை செய்து பார்க்க முடிவுசெய்தனர். அப்போது நடத்தப்பட்ட நிழற்பட சோதனையில் அவரது உடலில் மர்மமான பொருள் ஒன்று இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

அதன் பிறகு மருத்துவ குழுவினர் உதவியுடன் மேற்கொண்ட சோதனையில் அவரது வயிற்றில் இருந்து 85 சிறிய மாத்திரை வடிவிலான பொருட்களை கைப்பற்றினர். அவைகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவில் சிக்கிய மாத்திரை வடிவிலான பொருட்கள் கொக்கைன் என்னும் போதைப்பொருள் என்பது தெரிய வந்தது.

அயன்

அவைகளின் மொத்த எணிக்கை 752 கிராம் எனவும் அவற்றின் மதிப்பு ரூ.11 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த நபரை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web