பால் ரூ.210, சிக்கன் ரூ780 ?! வரலாறு காணாத விலை உயர்வால் திணறும் பொதுமக்கள்!!

 
பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி உதவி அளிக்க சர்வதேச நாணய நிதியம் மறுத்துவிட்டது. நிதி உதவி கிடைத்தால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் எனும் நிலையில் உள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. எனினும், இதற்கு முந்தைய வாக்குறுதிகளை அந்நாடு நிறைவேற்றாததால், கூடுதல் நிதி உதவி அளிக்க சர்வதேச நாணய நிதியம் மறுத்து வருகிறது.

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும், தொடர் இறக்குமதிக்கான வாய்ப்பு குறைந்து வருவதாலும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பால் லிட்டர் ரூ.190 ஆக இருந்த நிலையில் நேற்றிலிருந்து ரூ.210 ஆக அதிகரித்துவிட்டது என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கோழி இறைச்சி விலை கிலோ ரூ.600 வரை இருந்தநிலையில் தற்போது கிலோ ரூ.750 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. பிராய்லர் சிக்கன் விலை கிலோ ரூ.500 வரை உயர்ந்துள்ளது. மாட்டிறைச்சி விலை கிலோ உச்சகட்டமாக ரூ.1000 முதல் ரூ.1100 ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ.20உயர்ந்துள்ளது. இதனால் சமானிய மக்கள் முதல் நடுத்தர குடும்பத்தினர் வரை கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச நிதியத்துக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே கடன் உடன்பாடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் பொருளாதாரச் சிக்கல் தொடர்ந்து வருகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web