திருமணத்தை மறைத்து 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொட்டாரக்குறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் (30) கூலித் தொழில் செய்து வந்தார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், வேலைக்காக நெல்லை தச்சநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணமானதை மறைத்து காதலிப்பதாக கூறியுள்ளார்.

சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், திருமணம் செய்யக் கேட்டுள்ளார். ஆனால் கண்ணன் மறுப்பு தெரிவித்து, தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர், சிறுமி நிறைமாத கர்ப்பிணி என தெரிய வந்ததும், பெற்றோர் விசாரித்ததில் கண்ணனுக்கு ஏற்கனவே மனைவி, குழந்தை இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றத்தை கண்ணன் ஒப்புக்கொண்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
