சூடுபிடிக்கும் மொழிப்போர்... தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

 
ஏர்டெல்
 


மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தியை படிக்க மும்மொழி கொள்கையை வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில்  தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில்  மும்பையில் மராத்தி தான் ஆட்சி மொழி.  இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் வசிப்பதால் அதிக அளவில் ஹிந்தியே  பிரதானமாக பேசப்படுகிறது.


இப்படி இருக்கையில், மும்பையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில், மராத்தியில் பேசிய வாடிக்கையாளரிடம் இந்தியில் பதிலளித்துள்ளார் ஊழியர். இதனையடுத்து, மராத்தியில் பேசுமாறு கூறினார்.  அவரிடம், ‘நான் ஏன் மராத்தியில் பேச வேண்டும். எனக்கு மராத்தி தேவையில்லை’ நாங்கள் இந்தியாவில் வாழ்கிறோம், யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் பயன்படுத்தலாம்” என்று என அந்த ஊழியர் வாக்குவாதம் செய்கிறார்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் பணிபுரிபவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என கண்டனக்குரல் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏவும் அக்கட்சியின் மகளிர் அணி தலைவருமான சித்ரா வாக் ” ஒருவர் மகாராஷ்டிராவில் வசித்தால், அவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை தெரியவில்லை எனில், அவர்கள் அதனை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் அல்லது மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 
கடந்த வாரம் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர்  தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி எனவும்,  மாநிலத்தில் வசிப்பவர்கள் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மகாராஷ்டிரா அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து   அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழியைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் தீர்மானத்தையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web