1.30 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் கூட்டம்... திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
திமுக இளைஞரணி நிர்வாகிகளின் முக்கிய மண்டலக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று டிசம்பர் 13ம் தேதி திருவண்ணாமலை சென்றடைந்தார். அவரை அங்குத் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் இன்று டிசம்பர் 14ம் தேதி திமுக இளைஞரணி நிர்வாகிகளின் மண்டலக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1.30 லட்சம் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றே திருவண்ணாமலைக்கு சென்றடைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் பலத்த வரவேற்பு அளித்தனர். வரவேற்பிற்குப் பிறகு, இளைஞரணி நிர்வாகிகளின் மண்டலக் கூட்டம் நடைபெற உள்ள இடத்திற்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளைச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தக் கூட்டம் திமுகவின் அரசியல் வியூகத்தில் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
