மும்மொழி கொள்கையை ஏத்துக்கோங்க ... மத்திய கல்வி அமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம்!

 
தர்மேந்திர பிரதான்

 தேசிய கல்விக் கொள்கை குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில்   மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கல்வியை அரசியலாக்க வேண்டாம். அரசியல் வேறுபாடுகளைக் கடந்த மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டும். தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

தேசிய கல்வி கொள்கை - ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்பதே கிடையாது. தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்ற கேள்வியே கிடையாது.  பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் கூட்டாட்சிக்கு எதிரானதாக உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக அமல்படுத்தாதது துரதிருஷ்டவசமானது.

முதல்வர் ஸ்டாலின்

இந்திய கல்வியின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைந்ததுதான் சமக்ரா சிக்சா திட்டம். பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.  

1968ல் தொடங்கி இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக இது உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக செயல் படுத்தாதது என்னை பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானது.இளம் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்த கொள்கையை அமல்படுத்த  செயல்ப்ட வேண்டும்.  அதை விட்டுவிட்டு இப்படி புதிய கல்விக் கொள்கையை அரசியல் காரணங்களுக்காக ஒதுக்கினால் இதன் மூலம் மாணவர்கள் மட்டுமில்லை ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இதனால் உருவாகும் வாய்ப்புகளை இழக்கலாம்.

சமக்ரா சிக்‌ஷா போன்ற மத்திய அரசு-ஆதரவு பெற்ற திட்டங்கள் அனைத்துமே புதிய கல்விக் கொள்கை உடன் கடந்த 2020 -ஆம் ஆண்டிலிருந்தே இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, PM SHRI பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையின் முன்மாதிரி பள்ளிகளாக கருதப்பட்டது. இந்த சூழலில், தமிழ்நாடு குறுகிய பார்வையுடன் புதிய கல்விக் கொள்கையை பார்ப்பது என்னை பொறுத்தவரை பொருத்தமற்றது என்று தான் சொல்வேன். அரசியல் வேறுபாடுகளை மறந்து NEP-ஐ (தேசிய கல்வி கொள்கை) அமல்படுத்து வேண்டும்.
சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதைப்போல, அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது பல்வேறு மாற்றங்களை செய்யும் சீர்திருத்தங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. இப்படியான தமிழ் மொழியை தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.” எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web